search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை மறியல்"

    ஊத்துக்கோட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது.

    இங்கிருந்து ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், பேரண்டூர், சென்னங்காரணி, கண்டிகை, சூளமேனி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று புகார் எழுந்தது.

    இந்தநிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கருகிய நெற்கதிர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் எதிரே நேற்று ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்த், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    இதன் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரிய பாளையம் இடையே சுமார் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் பிரச்சனையை தீக்கக்கோரி அப்பகுதி மக்கள் இன்று காலை பூண்டி ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நம்பாக்கத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்கால்ஓடை பகுதியில் அமைத்த ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து நம்பாக்கத்தில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு அனுப்பி குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கோடை காணரமாக கல்கால் ஓடை பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றி விட்டது. இதனால் டேங்கர் லாரி மூலமாக நம்பாக்கத்தில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இதில் குடும்பத்துக்கு 5 குடங்கள் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி அப்பகுதி மக்கள் இன்று காலை பூண்டி ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க முயற்ச்சி செய்வதாகவும், கூடுதலாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×